சனி, செப்டம்பர் 10, 2016

இனி வழியெங்கும் வலியில்லை!



சுடுஞ்சொல் வலி
சுருக்கென உள்ளிருந்து
கண்ணில் விழுந்த துாசியாய்
கையில் பட்ட காயமாய்
ஓயாமல் உறுத்தியது,
உள்ளிருந்து கலங்கிடவா
உதறிவிட்டு உறங்கிடவா?

தவறெங்கு உள்ளதென்று
தனித்திருந்து யோசித்தால்,
தவறேதும் செய்யாமல்
தலை குனிந்து நின்றபடி,
அலையடித்த மணல் போல
அங்கும்மிங்கும் உருண்டதிங்கே!
பாசமுள்ள மனசு மட்டும்
பாதி வழி வந்து வந்து
பரிதவித்து நின்றதிங்கே!


கூர்வேல் சொற்களால்
காயம் பட்ட உள்ளத்தில்
மருந்திட்டு மறந்தாலும்
வடுவாகி விட்டதானால்
பார்க்கும் போதெல்லாம்
பதறி துடித்ததிங்கே!

நேற்று ஒன்று தோன்றியது,
நெடுந்தூர பயணமிது
நெருஞ்சி முள் குத்தியதால்
நிலை குலைந்து நில்லாமல்,
போகும் வழியெங்கும் 
பூத்து நிற்கும் மலர்களோடு
பூரித்து கொண்டாடும் 
வாழ்வே போதும்!
இனி வழியெங்கும் வலியில்லை!


                         - மே.இசக்கிமுத்து