வியாழன், மே 03, 2007

நல்ல மனம் வாழ்க!!!

சென்ற மாதம் 19.04.2007 அன்று இரவு தூத்துக்குடி செல்வதற்க்காக பெங்களுர் ரயில் நிலையத்தில் 7வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தோம். மழை வேற பெய்துகொண்டிருந்தது. என்னுடைய 3 வயது பையன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான். அவனை ஒரு இடத்தில் உட்கார வைப்பதே பெரிய வேலையாக இருந்தது எனக்கு. ரயில் வந்து பிறகு அவனை தூங்க வைக்கும் வரை...அப்பப்பா.... மைசூரிலிருந்து பெங்களுக்கு 9.15க்கு வரவேண்டிய மைசூர் = தூத்துக்குடி விரைவு ரயில் 10.00க்கு வந்தது. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரயில் தாமதமாக வருவதில் அதிர்ச்சி ஒன்றுமில்லை அது வழக்கமாக நடக்கிற நிகழ்வு தான். ஆனால் 7வது பிளாட்பாரத்திற்கு வரவேண்டிய ரயில் 6வது பிளாட்பாரத்தில் வந்துகொண்டிருந்தது. ரயில் வரும் நேரத்தில் தான் இந்த மாற்றத்தை அறிவித்தார்கள். எல்லோரும் 6வது பிளாட்பாரம் நோக்கி ஓடினார்கள். எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை எனென்றால் 7வது பிளாட்பாரத்தில் இருந்து 6வது பிளாட்பாரம் செல்ல வேண்டுமென்றால் 7வது பிளாட்பாரம் முடியும் வரை வந்து ரயில்வே பாதையை கடந்து வரவேண்டும் அல்லது 7வது பிளாட்பாரத்தில் இருக்கும் படிகளில் ஏறி பின்பு 6வது பிளாட்பாரத்தில் இறங்க வேண்டும். மூன்று ‍பைகளை தூக்கிக்கொண்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு.. என் மனைவிக்கு கண்ணீர் வராத குறைதான். எப்படியோ சமாளித்துக்கொண்டு மெதுவாக நடக்கத்தொடங்கினோம்..அப்பொழுது கடவுள் வந்த மாதிரி ஒருவர் தான் வைத்திருந்த பையை தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு என்னிடம் இருந்த ‍ஒரு பையையும் என் மனைவியிடம் இருந்த ஒரு பையையும் வாங்கிக்கொண்டு வந்தார். ஏ.சி கோச்சில் அவருடைய மனைவியையும் மகளையும் அமர வைத்துவிட்டு எங்களிடம் "நீங்க எந்த கோச்சு" என்று கேட்டார். "பரவாயில்லை சார் ரொம்ப நன்றி எஸ்.2 பக்கத்தில் தான் இருக்கு நாங்க போயிடுறோம"் என்றேன். "பரவாயில்லை, உங்க சீட்டுல கொண்டு தர்றேன"் என்று கூறிக்கொண்டு எங்கள் இருக்கையில் பைகளை வைத்துவிட்டு. "சரி தம்பி நான் வர்றேன் "என்றார். " சார் நீங்க எங்க போறீங்க, உங்க பெயர் என்ன ?"என்றேன். அவருடைய பெயர் சுப்புராமன் என்றும் மதுரைக்கு செல்வதாகவும் கூறினார். ரொம்ப நன்றி சார் என்றேன். " நல்லது தம்பி" என்று புன்னகைத்துவிட்டு அவருடைய கோச்சுக்கு சென்றார். இன்றைய அவசர காலத்தில் மற்றவர்களை பற்றி கவலை பட நேரம் இல்லாமல் இருக்கும் மனிதர்களின் மத்தியில் சுப்புராமன் போன்ற நல்ல மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருந்தது எனக்கு. அந்த நல்ல மனம் படைத்தோர்கள் என்றும் வாழ்க!!!

5 கருத்துகள்:

கமல் ராஜன்.பா சொன்னது…

நன்றி தோழரே.. அந்த கவிதையானது.. மனிதன் இயற்கையும் யோசிக்க வைத்துவிட்டான் என்பதன் பொருள் கொண்டு இயற்றியது.. அவள் தாய்தான் அதனால்தான் எந்த மகனின் பசியாற்றலாம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள் என்று பொருள்.. :) எமது கூகுள் குழுவில் விருப்பம் இருப்பின் இணையுங்கள்.. http://groups-beta.google.com/group/Tamil2Friends

ராதா செந்தில் சொன்னது…

//இன்றைய அவசர காலத்தில் மற்றவர்களை பற்றி கவலை பட நேரம் இல்லாமல் இருக்கும் மனிதர்களின் மத்தியில் சுப்புராமன் போன்ற நல்ல மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள்//

சரியாக சொன்னீர்கள்...

பத்மா சொன்னது…

isakki. seinanri marakkum ikkalathil seithathai ulagukku velicham pottu kaatiya neengalum uyarnthavar than

தினேஷ் சொன்னது…

ஒரு நல்ல மனிதனைப் பற்றிய நல்ல விசயங்களை நன்றாக எழுதிருக்கிறிர்கள்...

தினேஷ்

பெயரில்லா சொன்னது…

சில நல்ல மனிதர்களால் தான்
இந்த உலகமே இயங்கி வருகிறது
அந்த நல்ல மனிதர் வாழ்க நாடு போற்ற வாழ்க