
சாணக் கூந்தலில்
பூசணிப் பூச்சூடி,
பொட்டுடன் புள்ளி வைத்த
பொடிப் பொடியாய் - வண்ண
புடவை கட்டி,
கன்னம் குழிவிழ
நாணத்தோடு நகைத்தபடி
மனம் மயக்க,
திரும்பிப் பார்க்க வைக்கும்
தினமொரு ஒப்பனையில்,
எழில் கொஞ்சும் கற்பனையாய்
அதிகாலை நேரத்தில்
விதவிதமாய் வாசலெங்கும்,
மார்கழி மாதமெல்லாம்
கோல மங்கை மலர்ந்திருப்பாள் !