Thursday, December 22, 2011

மார்கழி மாக்கோலம்!



சா
ணக் கூந்தலில்
பூசணிப் பூச்சூடி,

பொட்டுடன் புள்ளி வைத்த
பொடிப் பொடியாய் - வண்ண
புடவை கட்டி,


கன்னம் குழிவிழ
நாணத்தோடு நகைத்தபடி
மனம் மயக்க,

திரும்பிப் பார்க்க வைக்கும்
தினமொரு ஒப்பனையில்,

எழில் கொஞ்சும் கற்பனையாய்

அதிகாலை நேரத்தில்

விதவிதமாய் வாசலெங்கும்,


மார்கழி மாதமெல்லாம்
கோல மங்கை மலர்ந்திருப்பாள் !

2 கருத்துரைகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மார்கழியில் மலரும் கோலம் போலவே கவிதையும் அழகு.

நலமா?

இசக்கிமுத்து சொன்னது…

நன்றி சகோதரி!
நான் நலம், நீங்கள் நலமா?
அலுவலக வேலைப் பளு காரணமாக பல நாட்களாக வலை பதிவு பக்கம் வர இயலவில்லை.