செவ்வாய், மார்ச் 20, 2007

நிலாச்சோறு!!!


நிலாச்சோறு என்றவுடன் நம் எல்லோருக்கும் சிறுவயது ஞாபகம் வருவது இயற்க்கை. நாம் சோறு சாப்பிட மறுக்கும் ‍ஒவ்வொரு முறையும் அம்மா நமக்கு நிலவை காட்டி அதில் ஓளவை பாட்டி கம்பு வைத்துக்கொண்டு ‍வெற்றிலை சாப்பிட்டு கொண்டு இருப்பதாக கதை சொல்லி நமக்கு சோறு ஊட்டுவாள். பிறகு அமாவாசை நாட்களில் கூட நிலவை காட்டினால் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்து அழுத நாட்கள்...

கொஞ்சம் வளர்ந்த பின்பு நாம் நம் நண்பர்களோடு சேர்ந்து வீட்டு முற்றத்தில் கூட்டாஞ்சோறு சாப்பிட்ட பிறகு ஆளுக்கொரு கதை சொல்லி விளையாண்ட நாட்கள், மறுநாள் புதிதாக கதை சொல்வதற்காக அப்பாவிடம் கதை சொல்ல சொல்லி அடம்பிடித்த நாட்கள், நிலவொளியில் பக்கத்து வீட்டு பசங்களோடு சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடி பள்ளிக்கூட வீட்டுப்பாடத்தை செய்ய மறந்து கணக்கு வாத்தியாரிடம் பிரம்படிபட்ட பசுமையான நாட்கள், பிறகு வீட்டின முற்றத்தில் கட்டிலில் தம்பிகளோடு சேர்ந்து நிலவை ரசித்தபடி ஏதேதோ பேசி மகிழ்ந்து அப்படியே தூங்கிபோன நாட்கள்.. முழுநிலா காலங்களில் நிலவொளியில் படுத்தபடி நெல்லை வானொலியின் நிலா பாடல்களில் நி‍ைனவை மறந்த நாட்கள்...

‍அப்பப்பா..நிலவோடு இணைந்த நினைவுகள் இன்னும் ஏராளம்.. நிலவே சிறுவயது நினைவுகளை என் சிந்தைக்கு கொண்டு வந்து செல்லும் ‍உன்னோடு பயணிக்கையில் இந்த உலகத்தையே மறக்கின்றேன்!!!

5 கருத்துகள்:

பொன் வானவில் சொன்னது…

மிக அழகான நடையில், இனிய சொற்களைக் கொண்டு அந்த நாட்களை நினைவு படுத்தியிருக்கிறீர்கள், படிக்க மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. படித்து முடித்ததும், "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" என்ற எனக்குப் பிடித்த ஆட்டோகிராப் பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

Unknown சொன்னது…

Congratulations. Very nice. Expecting more from you.

Regards,


Munower

Albert Fernando சொன்னது…

துவக்கம் குளிர் நிலவில்!
பால்ய நினைவுகள் பால் நிலவோடு!
நினைவுகளை நிதர்சனமாய்
நெகிழ்ந்திட வைக்கும் நனவு வேள்விகள்!
நிலவுக்கு கரம்பிடித்து அழைத்துச் சென்ற கையோடு
உங்கள் எழுத்துலக வீதியில்
இனியும் நடக்க ஆசைப்படுகிறோம்!
ஆவலை நிறைவேற்றுவீர்கள்தானே!!

மே. இசக்கிமுத்து சொன்னது…

தொடர்ந்து எழுதுவதர்க்கு ஊக்கமாக அமைந்த உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே!!

பத்மா சொன்னது…

nandru nandru.ippvavum nangal nilachoru ungirom.melliya isai mithanthu vara ,chilena kaatru thavanzhnthu vara,pookal narumanam parappa,nilavoliyil powrnamithorum nilachoru undu.kavithai soluma nanbargal arugil irunthaal melum azhagu.rasikave vaazhkai.