திங்கள், மார்ச் 26, 2007

மனிதாபிமானம்!!!

சென்ற வாரம் நான் பெங்களுர் இந்திராநகர் காவல் நிலையம் அருகில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் மீது பின்னால் வந்த ஸ்கூட்டர் லேசாக இடித்துவிட்டது. இரண்டு வாகனங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதன் பின் நடந்த நிகழ்ச்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கா‍ரை ஓட்டி வந்த நன்றாக உடையணிந்த நடுத்தர வயது மனிதர் உடனே இறங்கி வந்து ஸ்கூட்டரில் இருந்த இளைஞரை "பளார் " என்று கன்னத்தில் அடித்துவிட்டு வாயில்வந்தவாறு திட்டுகிறார். அந்த இளைஞருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எல்லோரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இளைஞரது முகத்தை பார்க்கவே பரிதாபமாகயிருந்தது. எதுவும் பேசாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்.

காரில் வந்தவருக்கு கோபம் வருவது தப்பில்லை ஏனென்றால் தன்னுடைய புதிய காரை இடித்துவிட்டான். தவறு யார்மேல் இருந்தாலும் அதனால் ஏற்படும் கோபத்தை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தியிருக்கலாம். அந்த
இளைஞன் திருப்பி அடித்திருந்தால் அந்த நிகழ்ச்சி கொஞ்சம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் அவன் என்ன நினைத்திருந்தானோ ‍தெரியவில்லை அமைதியாக சென்றுவிட்டான்.

பெங்களுர் போன்ற தகவல்தொழிலநுட்ப நவீன நகரத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி எங்கோ செல்கிறது. எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும் மக்களின் மனங்கள் மட்டும் தன்னலத்தைவிட்டுவிட மறுக்கின்றன. பெங்களுர் நகர வீதிகளில் வளர்ந்துவரும்
தகவல்தொழிலநுட்பத்தோடு வசதி வாய்ப்பிற்கு ஏற்றாற்போல் மக்களும் தங்களின் நடை உடை தோற்றங்களை மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். ஆகட்டும் அதை நான் இப்பொழுது குற்றம் கூறுவதற்கில்லை, ஆனால் அவர்களின் வெளிதோற்றத்திற்கு ஏற்றாற்போல் உள்மனங்களை ஏன் மாற்ற மறந்துவிடுகிறார்கள். இன்றைய மக்களின் மனங்களில் மனிதாபிமானம் என்ற உணர்வு மங்கிபோய்விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.

6 கருத்துகள்:

பொன் வானவில் சொன்னது…

அவசர உலகத்தில் எல்லாமே அவசரமாக நடக்கிறது. நின்று நிதானித்து பேசுவதற்கு பலருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே கைகள் பேச ஆரம்பித்து விடுகின்றன. மனிதாபிமானத்தை காட்டினால் என்ன இலாபம் கிடைக்கும் என்று கணக்கு பார்க்கும் உலகத்தில் நாம் இருக்கிறோமே என்ன செய்வது?

சில சமயங்களில் கையினால் அடிப்பதைப் போன்றே சொற்களைக் கொண்டு அடிப்பதும் வலிக்கிறதே..

மே. இசக்கிமுத்து சொன்னது…

உண்மைதான்! தன்னை போல் பிறரை கருதும் மனப்பக்குவம் வரும் வரையில் இது மாதிரியான நிகழ்ச்சிகள் நடந்தேரத்தான் செய்யும்...

ramya சொன்னது…

first thanks for visiting my blog...

nijamaavey it hurts wen ppl bhave like this u knw...idhu pondru pala dhinandhorum nadakindradhu, nam kannuku sila than pulapadudhu...

manidhanin vaazhkai muari maarinalum, manasil indrum maatram varavillai...

gud post...

ramya சொன்னது…

ennapa emuthu...enga irukka nee...post potiruppa or enakku commentiruppanu paartha amaidhiya bangalore climatela thoongitu irukka..ezhundhiri anjali ezhundhiru...
ila illa...ezhundhiru muthu ezhundhuru..

மே. இசக்கிமுத்து சொன்னது…

துங்குவதாக நினைத்து என்னை எழுந்திட சொன்னதற்கு நன்றி!! ஆனால் தூங்கிபோனது நானல்ல, எனது கணினி!! எனது கணினி ஒத்துழைக்க கொஞ்சம் மறுத்துவிட்டது!!

Unknown சொன்னது…

Really nice to see all those comments.
And anna your web page is very interesting.
You have shared all your school life experiences.
Thats great.
I hope this web page will make all your friends happy and join them in your friendship train.

By kumarasamy