மண் வாசனை வீசி சிந்தனை மாற்றி
மிடுக்கான மின்னலுடன் இடிமுழங்க
படபடவென்று சுடசுட மேனியில் விழும்போது
இருபது வயதின் வேகம் எழுபதில் ஏறும்!
பட்டுத் தெரிக்கும் நீர்த்துளியில்
விட்டு உடையும் நீர்க்குமிழி!
கரம் பிடித்து நடைபழகும் மழலையாய்
குடை பிடித்து சாரல் மழையில் குதூகலமாய்
கும்மாளமிடும் பள்ளிப் பருவம்!
வெளுத்துக்கட்டிய அடைமழையில்
வெள்ளை ரோஜாவின் மொட்டுக்களெல்லாம்
சீக்கிரமாய் சிரித்து நிற்கும்!
மழை நின்ற நேரத்தில்
கல்கண்டு குமுதமெல்லாம்
காகித கப்பல்களாய் முற்றக் கடலில்!
மரக்கிளைகளை குலுக்கி மழையென கூறி
மகிழந்திடும் மனங்கள்!
தேங்கிய நீரில் சிறகுகளடித்து
தெருவெங்கும் அரங்கேறும் காக்கை குளியல்கள்!!
மழைக்காலம் வந்துவிட்டால் மனமெங்கும் சந்தோசம் தான்!!
3 கருத்துகள்:
அருமை அருமை!
மழைக்காலம் யாருக்குத்தான் பிடிக்காது?
நல்ல கவிதை.
சந்தோஷமாக இருக்கிறது படிக்க.
நிறைய எழுதுங்கள்
சிறுவயதில் போட்டிபோட்டுக் கொண்டு மழையில் நனைந்து கும்மாளமிட்டது, காகிதக்கப்பல் செய்துவிட்டது, கப்பல் நல்லபடியாகச் சென்று சேர மனமுறுகி வேண்டுவது....எல்லாம் நினைவுபடுத்தியமைக்கு நன்றி.
கருத்துரையிடுக