திங்கள், டிசம்பர் 31, 2007

மனமெங்கும் மார்கழி!!



சுகமான குளிரில் அதிகாலை உறக்கம்
சுப்ரபாத ஒலியில் மறைந்திடும் பனியாய்!!

திருப்பாவை திருவெம்பாவை தெருவெங்கும் ஒலிக்க
தினந்தோறும் பஜனை அதிகாலை மலர்ச்சி!!

வண்ணக் கோலங்கள் வாசலெங்கும்
வரிசையாய் பூசனி பூச்சூடி வீதியெங்கும் கோலாகலம்!!

மார்கழி மாதம் மலர்களின் மகரந்த காலம்!
முகத்தினில் பனித்துளி பருக்களோடு
முந்தாநாள் பூப்பெய்த பருவப்பெண்ணாய்
அனேக பூக்களெல்லாம் நாணத்தோடு நனைந்து நிற்கும்!!


தூரத்து காட்சியெல்லாம்
பகலவனை பார்க்கும் வரை
மூடுபனியுடுத்தி முக்காடு போட்டிருக்கும்!!

தோட்டக்காடெங்கும்
தோரணங்கள் காய்கறிகள்!!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கனவுலகில் வருவதுபோல்
பச்சை உடையணிந்து பார்ப்பவரை கிரங்கடித்து
காற்றோடு கையசைக்கும் நெல்மணிகள்!!

மனதிற்கு பிடித்த மார்கழி மாதம்
மாதங்களின் சுவாசம் இது!
வசந்தத்தின் வாசல் இது!
"பா"க்களின் ராகமாய்
பூக்களின் வாசமாய்
ஊரெங்கும் உற்சாக ஊற்றாய்
மனமெங்கும் மார்கழி!!

6 கருத்துகள்:

தினேஷ் சொன்னது…

இசக்கிமுத்து,

‘மார்கழி’யில் உங்கள் கவிதையை படிப்பது மகிழ்ச்சியாகவும், குளுர்ச்சியாகவும் இருக்கிறது...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்!

தினேஷ்

பத்மா சொன்னது…

நன்று,
சும்மாவா சொன்னார்கள் மாதங்களில் மார்கழி என்று?
எனக்கும் மிகவும் பிடிக்கும்.கூடவே ஜலதோஷமும்.

தினேஷ் சொன்னது…

அன்மைக் காலமாக எந்த பதிவையும் கானும். உங்கள் பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன்…

தினேஷ்

நிவிஷா..... சொன்னது…

nalla kavidhai.
thodarnthu eluthavum

natpodu
nivisha

rahini சொன்னது…

nalthoor kavithai padithu
en manathu ilakippoonathu

anpoodu
rahini
germany

ரூபஸ் சொன்னது…

மன்னிச்சுக்கங்க முத்து, ரொம்ப தாமதமா இதைப் படிக்கிறேன்..

மார்கழியின் மகத்துவத்தை உங்கள் கவிதை அருமையாய் உணர்த்துகிறது