செவ்வாய், டிசம்பர் 18, 2007

முதல் கவிதை!!


ள்ளி பருவத்தின் முதல் கவிதை
படிக்கும்பொழுதெல்லாம்
பனி விழும் மலராய் மாறுதே மனது!!



முதல் கவிதையை பிரசிவிக்க பட்ட பாடுகள்,
பல்துலக்கும் நேரம் முதல் பாய் விரிக்கும் நேரம் வரை வார்த்தை தேடல்கள் வானமென நீண்டு கொண்டது !!

சிந்தையில் சிக்குண்டு சிதறிய வார்த்தைகளை வரப்புக்குள் கொண்டுவந்து, எழுதி எழுதி அடித்து அடித்து வார்த்தை கொலைகள் வகையின்றி நடந்தேறும்!!

கனவிலும் கருவாய் வளர்ந்தது என் கவிதை!
வெயிலிலும் நிழலாய் தொடர்ந்தது என் கவிதை!
வியர்வை துளிகளெல்லாம் கவிதை துளிகளாய்!!

இருவார இறுதியில்
இனிதாய் பிறந்தது கவிதை!!
ஒருமுறை இருமுறை பலமுறை வாசித்து,
கரம் பிடித்து நடைபழகும் மழலையாய்,
மழை துளி நிலத்தில் பட்டுதெரித்ததாய்
துள்ளி குதித்தது மனம்!!

பள்ளி பருவத்தின் முதல் கவிதை
படிக்கும்பொழுதெல்லாம்
பனி விழும் மலராய் மாறுதே மனது!!

4 கருத்துகள்:

Divya சொன்னது…

முதல் கவிதை முயற்ச்சியை ஒரு கவிதையாக்கி விதம் மிகவும் அருமை!

பெயரில்லா சொன்னது…

எனக்கு குனா கமலின் நினைவு வருகிறது. அதில் காதலிக்கு கடிதம் காதலியிடமே எழுத செல்லி அதை காதலியைவிட்டே படிக்க சொல்லும் காட்சி புதுமை , அது போல் உங்கள் முதலில் மலர்ந்த கவிதையும்
அருமை :)

பத்மா சொன்னது…

enakkum en muthal kavithai nyapagam vanthathu.5 aam vaguppil ezhuthinen.muthal ezhuthu ellam uyir ezhuthaaga.indrum ninaivil ullathu.nyapaga kuthiraiyai thati ezhupineergal.
nalla kavithai.
puthandu vaazhthukkal

காரூரன் சொன்னது…

எண்ணங்களின் கோர்வை தான் கவிதை.
கம்பனின் உரை நடை பின்னாளில் கண்ணதாசனின் கவி நடை,
கண்ணதாசனின் உரை நடை பின்னாளில் வைரமுத்துவின் கவி நடை.
ரசனையின் பார்வையில் தான் கவிதை.
நவீன நக்கீரர்களின் நக்கல்களுக்கு இடம் கொடாமல் தொடருங்கள்.

வாழ்த்துக்கள்.