வியாழன், மார்ச் 06, 2008

பள்ளி நாட்களில் - 2

ரம்ப பள்ளி நாட்களில் நடந்த சம்பவங்கள் பல என் ஞாபகத்தில் இருந்ததில்லை ஒன்றை தவிர. நான் ஆரம்ப பள்ளி வாழ்க்கையை தூத்துக்குடி மாசில்லாமனிபுரத்தில் உள்ள செயின்ட் சார்லஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தொடங்கினேன். எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி நாட்கள் இந்கு தான் சந்தோஷமாக கடந்தது.



அப்பொழுது நான்காம் வகுப்பு படித்துகொண்டிருந்ததாக ஞாபகம். வகுப்பில் பையன்கள் இரண்டு பிரிவாக தான் இருப்போம். சீலன் கூட கொஞ்சம் பேர், மோகன கண்ணன் கூட கொஞ்சம் பேர். விளையாட்டு ஆனாலும் சண்டை ஆனாலும் இந்த இரண்டு பிரிவினர்களிடையே தான் போட்டி இருக்கும். இவர்களிருவர்களின் சண்டைகளை தடுத்து தன்டனை கொடுப்பதே எங்கள் மிஸ்ஸின் முக்கிய வேலையாக இருக்கும். எனது நண்பர்களான பிரவீனும் ஜவகரும் மோகன கண்ணனுடன்‍ சேர்ந்து இருந்ததனால் நானும் அந்த செட்டில் சேர்ந்து இருந்தேன்.



‍ ஒருநாள் மதியம் சாப்பிட்டுவிட்டு வேப்பமரத்தடியில் அமர்ந்து கொண்டு சினிமா கதை பேசிகொண்டிருந்தபோது சீலனுடன் இருக்கும் பிரபாகர் " ரஜினி மெ*** தெரியுமா" என்று ஏதோ சொல்ல, எப்போதும் அமைதியாக இருக்கும் நான் அன்று " கமல் அ* ‍தெரியுமா" என்று சொல்ல அந்த வழியாக வந்த எங்கள் மிஸ் இதை கேட்டுவிட, எங்களிருவருக்கும் நிறைய திட்டு. எங்களுடைய மிஸ் இந்த சம்பவத்தை 5ம் வகுப்பு மிஸ்ஸிடம் சொல்ல, அன்று மாலை அசம்பளி முடிந்தவுடன் 5ம் வகுப்பு மிஸ் என்னிடம் வந்து " கமல் அ** ?, உனக்கு கொழுப்பு ரெம்ப" என்று திட்டி விட, என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றதை இப்பொழுது நினைத்து பார்த்தாலும் சிரிப்பாக தான் வருகிறது. எதுவும் அறியாத பருவம் அது. பள்ளி விட்டு செல்லும் வழிகளில் சினிமா நடிகர்களின் போஸ்டர்களின் மேல் இது மாதிரியான வாசகங்களை காணலாம், இதன் பாதிப்பால் தான் நான் அந்த மாதிரியான வார்த்தைகளை அர்த்தம் தெரியாமல் ‍பேசியிருக்க வேண்டும். மற்றுமொரு செய்தியையும் இங்கு நான் சொல்லியாக வேண்டும். அந்த காலகட்டத்தில் கமல்ஹாசன் தான் இளம்பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர் என்பது தெரிந்த விஷயம். 5ம் வகுப்பு மிஸ் என்னை கோபத்தோடு திட்டியதை நினைக்கும் போது சிரிப்போடு சேர்ந்து " சகலகலா வல்லவன்" திரைபடத்தில் வரும் "இளமை இதோ இதோ.. " என்ற புத்தாண்டு படல் தான் நினைவுக்கு வருகிறது. (தொடரும்..)

5 கருத்துகள்:

தினேஷ் சொன்னது…

மலரும் நினைவுகள் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது...


வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

ரூபஸ் சொன்னது…

ஹலோ.. மே*** , அ** அப்டின்னா என்ன அர்த்தம்??.. அதை சொல்லுங்க..

பெயரில்லா சொன்னது…

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the OLED, I hope you enjoy. The address is http://oled-brasil.blogspot.com. A hug.

Unknown சொன்னது…

Very good web page.
Tuning the pages from the past.
Keep rocking

Divya சொன்னது…

மலரும் நினைவுகள் பதிவாக அருமை!!