செவ்வாய், ஜூன் 03, 2008

நல்ல உள்ளங்கள் !!


சென்ற ஞாயிற்றுகிழமை (01.06.2008) பெங்களூர் மேனிலை பள்ளியில் ESI நடத்திய மேனேஜர் பதவிகளுக்கான தேர்வு எழுத சென்றிருந்தேன். தேர்வு மேற்பார்வையாளர் அறையினுள் வந்த உடனேயே தன்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டார். தான் 1995 ம் ஆண்டின் UPSC தேர்வில் தேர்வானவர் என்றும், தற்பொழுது ESIயில் பணிபுரிவதாகவும் தெரிவித்தார். பின்பு எங்களிடம் ஒரு சின்ன அறிவுரை, கேள்விகளை புரிந்துகொண்டு பதிலளியுங்கள், முதலில் தெரிந்த கேள்விகளுக்கு விடையளியுங்கள், தெரியாத கேள்விகளில் நேரத்தை செலவழிக்காதீர்கள் என்று கூறிவிட்டு ‍" Best of Luck" என்று வாழ்த்தும் தெரிவித்துக்கொண்டார். ஒரு வித்தியாசமானவரை சந்தித்ததில் பூரித்துவிட்டேன். நானும் நிறைய தேர்வுகள் எழுதியிருக்கிறேன், ஆனால் தேர்வு மேற்பார்வையாளர்கள் வந்தவுடன் சத்தம் போடாதீர்கள், மொபைல் போனை ஆப் செய்துவிடுங்கள், மனி அடித்த உடன் மட்டும் தான் கேள்வி தாளை பிரிக்க வேண்டும் என்று விதிமுறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்து விடுவார்கள். இவர்களின் நடுவே ‍தேர்வு எழுதுபவர்களுக்கு பயனுள்ள வகையில் கடைசி நேர அறிவுரைகள் வழங்கிய அந்த மனிதரை சந்தித்ததில் உண்மையிலேயே பூரிப்படைந்தவனாய் அன்று தேர்வு எழுதினேன் ஆனால் அவரின் பெயரை மட்டும் என்னால் ஞாபகத்தில் கொண்டுவர முடியவில்லை...

அன்றாட வாழ்க்கையில் இது போல நாம் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க நேரிடும். சந்திப்பின்போது பல விஷயங்கள் நமக்கு கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு கூட அந்த சந்திப்பு வழி வகுத்திருக்கலாம். பலதரப்பட்ட மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள், அவர்களை எதற்குதான் சந்தித்தோம் என்று தோன்றும், அந்த சந்திப்பை, பேசிய விஷயங்களை நாம் உடனே மறந்திடுவோம். இங்கே நான் அதை பற்றி பேச வரவில்லை.

சில பேர் இருக்கிறார்கள், ரயில் அல்லது பேரூந்து பயணத்தின்‍ போது அப்பொழுதுதான் சந்தித்திருப்போம் ஆனால் வலவலவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள், அவர்களை பற்றி, பல சம்பவங்களை பற்றி நிறைய பேசுவார்கள், சில சமயம் நமக்கு எரிச்சல்கூட வந்திருக்கும். அவர்களை பற்றி தற்பெருமை பேசி கொள்கிறார்கள் என்று நாம் அவர்களின் பேச்சை காதில் வாங்காது வேறு வழியின்றி இருந்திருப்போம் அல்லது வேறு எதை பற்றியோ நாம் சிந்தித்து கொண்டிருப்போம். . அவர்கள் தம்மை பற்றி தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள் என்ற மனநிலைக்கு நாம் வந்துவிடுவதால் அவர்கள் பேசுவதை காதில் வாங்காது இருந்துவிடுகிறோம். ஆனால் இது மாதிரியான சமயங்களில் சில நல்ல விஷயங்கள், சுவாரசியமான செய்திகள் நமக்கு கிடைக்கலாம்...

5 கருத்துகள்:

Divya சொன்னது…

சிந்திக்க வைத்தது தங்களின் பதிவு!

தினேஷ் சொன்னது…

எல்லா நிகழ்வுகளிலும் நல்லது உள்ளன என உணர்ந்துகிறது உங்கள் பதிவு...

நல்ல பதிவு...

தினேஷ்

ரூபஸ் சொன்னது…

நல்ல சிந்தனை. தொடர்ந்து எழுதுங்கள்.

தேர்வில் வெற்றிப்பெற எனது வாழ்த்துக்கள்

rahini சொன்னது…

nalla pathivukal
sinthanaiyai thuudi yathu
rahini

ராமலக்ஷ்மி சொன்னது…

//அவர்கள் பேசுவதை காதில் வாங்காது இருந்துவிடுகிறோம். ஆனால் இது மாதிரியான சமயங்களில் சில நல்ல விஷயங்கள், சுவாரசியமான செய்திகள் நமக்கு கிடைக்கலாம்...//

முற்றிலும் உண்மை.