புதன், பிப்ரவரி 03, 2010

அது ஒரு BIG FUN காலம் !


நான் கடைக்கு செல்லும் போது சில சமயம் என்னுடைய மூன்றரை வயது மகனை அழைத்து செல்வதுண்டு. வழியிலேயே ஆரம்பித்து விடுவான் "அப்பா எனக்கு பூமர் பபுல்கம் வாங்கி தாங்கப்பா கொஞ்ச நேரம் சவச்சிட்டு துப்பிறுவேன்", சில சமயம் "அப்பா புபாலு பபுல்கம் கூட ஒரு ஸ்டிக்ர் பிரியாம், கையில ஒட்டலாம்பா டிவில காமிச்சான், எனக்கு வேணும்பா" என்று வழி நெடுக சொல்லிக் கொண்டே வருவான். கடையை விட்டு செல்லும் போது பபுல்கம் வாங்காமல் வர மாட்டான். அந்த அளவுக்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் சின்னஞ்சிறு சிறுவர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. கார்டூன் நெட்வொர்க், போகோ, சுட்டி டிவி போன்ற சிறுவர்கள் பார்க்கும் தொலைக்காட்சிகளில் சொல்லவே வேண்டாம் குழந்தைகளின் மனங்களில் பதியும்படியான விளம்பரங்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் என்னுடைய மகன் பபுல்கம் (சுவிங்கம்) கேட்கும் போதெல்லாம் எனக்கு என் பள்ளி பருவ நாட்கள் நினைவுக்கு வந்துவிடும்.

நான் தூத்துக்குடி St.Charles English Medium Schoolலில் ஐந்தாம் வகுப்பு (1987களில்) படிக்கும் போது "பிக் பன்" (BIG FUN) சுவிங்கம் ரொம்ப பிரபலம். தினமும் மதியம் சாப்பிட்ட பின்பு இந்த BIG FUN சுவிங்கத்தை சுவைத்தபடியே தான் விளையாடுவோம். சில சமயமங்களில் BIG FUNனை சுவைத்தபடியே வகுப்பிற்கு சென்று டீச்சரிடம் திட்டு வாங்கியதும் உண்டு. BIG FUN சுவிங்கத்துடன் வரும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் படங்களையும், அதில் குறிக்கப்பட்டுள்ள ரன்களையும் சேகரிப்பதில் போட்டி போட்டுக் கொள்வோம். கபில் தேவ், கவாஸ்கர், திலிப் வென்சர்க்கார், ரவி சாஸ்த்ரி, விவன் ரிச்சர்ட்ஸ, அலன் பார்டர், மனிந்தர்சிங் போன்றவர்களின் படங்களை ஆர்வமாக சேர்த்து கொள்வோம். 6 மற்றும் 4 ரன்கள் குறிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் படங்கள் கிடைப்பது மிகவும் கடினம். 6 ரன் கிடைத்து விட்டால் அதை மற்றவர்களிடம் பெருமையாக காட்டிக்கொள்வோம். சில படங்களை நண்பர்களிடம் பரிமாற்றிக்கொள்வோம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் BIG FUN கிடைக்காது, அதனால் பள்ளிக்கு அருகில் சிதம்பரநகரில் உள்ள பேக்கிரிக்கு சென்று தான் BIG FUN வாங்குவேன். ஐந்து BIG FUN சுவிங்கம் மொத்தமாக வாங்கினால் ஒரு சிறிய பயிற்ச்சி புத்தகம் மாதரி ஒன்றை கடைக்காரர் தருவார், அதில் குறிப்பிட்டுள்ள படி அந்தந்த இடத்தில் அதற்குறிய ரன் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் படத்தை ஒட்டி முடித்து கொடுத்தால் கிரிக்கெட் பந்து, டையரி கொடுப்பார்கள் என்று கடைகளில் தொங்கி கொண்டிருக்கும் விளம்பரத்தை பார்த்து BIG FUN சுவிங்கம் வாங்கும் எங்களின் ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது. BIG FUN னின் விலை 35 காசுகள், அந்த நேரங்களில் 35 காசுகள் என்பது எங்களுக்கு மிக பெரிய தொகை. அவ்வப்போது 5 அல்லது 10 காசுகள் தான் எங்களுக்கு கிடைக்கும், அதையெல்லாம் சேர்த்து வைத்து 35 காசுகள் சேர்ந்ததும் ஒரு BIG FUN வாங்கி விடுவோம். ஆனால் பரிசு கிடைக்கும் அளவுக்கு என்னால் எல்லா படங்களையும் சேர்க்க முடியாமல் தான் போனது. தொலைக்காட்சி பெட்டி எல்லோருடைய வீட்டிலும் குடிபுகாத மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் தொடங்கப்படாத அந்த காலங்களிலும் சிறுவர்களின் மத்தியில் அந்த BIG FUN மிகவும் பிரபலமாக இருந்தது. இன்று நினைத்து பார்க்கும் போதும் ஆனந்தமாக தான் இருக்கிறது. அது ஒரு BIG FUN காலம் !

11 கருத்துகள்:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அருமையா எழுதியிருக்கீங்க . வாழ்த்துகள்..

தமிழமுதம் குழுமத்திலும் உங்க படைப்புகளை பகிரலாம்...

உங்க இமெயில் ஐடி தெரியலை.. இது என்னுடையது.

jmmsanthi@gmail.com

ஹேமா சொன்னது…

வணக்கம் இசக்கிமுத்து.நான் நல்ல சுகம்.நீங்களும்தானே.கண்டதே சந்தோஷம்.பல நாட்களுக்குப் பிறகு உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.புதுப் பதிவு அதிசயம்தான்.

சின்னப் பராயத்தை நினைக்க வைத்துவிட்டீர்கள்.எங்கள் ஊரிலே ரோட்டில் கிடக்கும் சோடா மூடி சேர்த்த ஞாபகம்.உள்ளுக்குள் ஒரு ஆங்கில எழுத்து.அதில் ஒரு சொற் தொடர் சேக்க வேண்டும்.இன்றும் தொடர்கிறதா அது !

rahini சொன்னது…

nalla pathivu neenda idaivelikku pin
inruthaan ungka pathivu paditheen

ராமலக்ஷ்மி சொன்னது…

//அது ஒரு BIG FUN காலம் !//

அந்த காலக்கட்டத்துக்கே கூட்டிச் சென்று விட்டீர்கள்.

அடிக்கடி பதியுங்கள்:)!

Unknown சொன்னது…

ம். நானும் கிரிக்கெட் மேட்ச் ஆடும் போது Big Fun சுவைத்த நினைவு வருகிறது. நல்ல பதிவு

hiiiiiiiiii சொன்னது…

hi anna,

ella pathipugalum super, namathu childhood- ta napagam paduthukirathu

வாழ்த்துகள்..
அடிக்கடி பதியுங்கள்

Anbu thambi
SIVA

hiiiiiiiiii சொன்னது…

hi anna,

ella pathipugalum super, namathu childhood- ta napagam paduthukirathu

வாழ்த்துகள்..
அடிக்கடி பதியுங்கள்

Anbu thambi
SIVA

Priya சொன்னது…

//அது ஒரு BIG FUN காலம் !//...நைஸ்!

பத்மா சொன்னது…

இசக்கி சார் நலமாய் இருக்கிறீர்களா?

ஹேமா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மு.வேலன் சொன்னது…

சுவிங்கமை பார்த்து சாப்பிடுங்கள். சில சமயங்களில் அதில் அசைவ 'gelatin' சேர்க்கப்படுகின்றன.