வெள்ளி, ஆகஸ்ட் 22, 2008

அரசாங்க அடாவடிகள்!

மைசூர் விரைவு ரயிலில் தூத்துக்குடியிலிருந்து பெங்களூர் வந்திறங்கிய அம்மாவையும் அத்தையையும் அழைத்து கொண்டு படிகளில் இருந்து இறங்கி வெளியே வந்த போது, டிக்கெட் பரிசோதகருடன் அமர்ந்திருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் (RPF) ஒருவர் எங்களை அழைத்து, எங்கிருந்து வருகிறீர்கள், எந்த ரயிலில் வந்தீர்கள் என்றேல்லாம் விசாரித்து விட்டு, அம்மா பையில் வைத்திருந்த முருங்கை காயை பார்த்து "இரண்டு முருங்கை காய் கொடு" என்றார் அதிகார தோரணையோடு. சரி இங்கே பெங்களூரில் இந்த மாதிரி நல்ல முருங்கை காய் கிடைக்காது, அதனால் எங்கள் பையில் இருந்த முருங்கை காயை பார்த்தவுடன் ஆசைப்பட்டு கேட்கிறார் என்று நினைத்து பையிலிருந்து இரண்டு காயை எடுத்து அவரிடம் கொடுத்தாள் அம்மா. அதிக அதிகாரமாய் "ரெண்டு எதுக்கு இன்னும் கொடு" என்றாரே பார்க்கலாம். வடிவேலு நிறைய படங்களில் சொல்லும் வசனம் "அட அவனா நீ " என்று நான் நினைத்துக் கொண்டு, ‍அவ்வளவு தான் இன்னும் கொடுக்க மாட்டேன் என்று அவரிடம் சொல்லிகொண்டு நடக்க தொடங்கினேன். அந்த காவலர் விடவில்லை, நில்லு நில்லு எங்கள் பின்னாலே வந்து, டிக்கெட் இருக்கா, உன்கிட்ட பிளாட்பாரம் டிக்கெட் இருக்கா என்று கேட்டுகொண்டே வர தொடங்கினார். எல்லாம் இருக்கு என்று சொல்லிவிட்டு நடக்க தொடங்கினோம். " பிளாட்பாரம் டிக்கெட் இல்லாம அடுத்தவாட்டி வா உன்ன பாத்துக்கிறேன் " என்று சொல்லி விட்டு சென்றாரே பார்க்கலாம். ஏதோ நான் பிளாட் பாரம் டிக்கெட் எடுக்காமல் அடிக்கடி வருவது மாதிரியும் அந்த காவலர் தான் என்னை அய்யோ பாவம் என்று விட்டுவிடுவது மாதிரியும் பேசிக் கொண்டு சென்றதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது.

இது சென்ற வாரம் நடந்த சம்பவம். எனக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் இந்த சமூகத்தை காக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்த சிலர் இந்த மாதிரி நடக்கும்போது ஆத்திரம் தான் வந்தது. தட்டிப் பறிக்கும் திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது. இந்த காவலரின் நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது, இவர் தன் அதிகாரத்தின் மூலம் அப்பாவி பயணிகளிடம் எதை எதையெல்லாம் வாங்க முடியுமோ அதையெல்லாம் வாங்கி பழக்கப்பட்டவராக இருக்க வேண்டும், மேலும் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளை பிடித்தால் அவரகளிடம் இவர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்கள் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. அரசாங்க சம்பளம், பல வகையான சலுகைகள் எல்லாம் இருந்தும் இவர்களின் பேராசை குறையவில்லை.

இம்மாதிரியான சுயநலவாதிகள் காவல்துறையில் இருக்கும் வரை அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் சமூக விரோத செயல்கள் செவ்வனே நடந்தேறத்தானே செய்யும்.

13 கருத்துகள்:

உண்மைத்தமிழன் சொன்னது…

இசக்கிமுத்து

இவர்கள் போன்றவர்களால்தான் சமூகம் கெடுகிறது. நீங்கள் சற்று அனுபவம் வாய்ந்த இளைஞராக இருந்ததினால் நிலைமை உங்களுக்குச் சிக்கலைக் கொடுக்கவில்லை.. கோபக்கார வலைப்பதிவர்களாக இருந்தால் வேறு மாதிரிதான் பிரச்சினை போயிருக்கும்..

என்ன செய்வது? 'அதிகாரம்' என்ற ஒன்றே போதும் இந்நாட்டில் அலங்கோலங்களை ஆரம்பிக்க..!

மங்களூர் சிவா சொன்னது…

இவனுங்க மத்தில வாழறது ரொம்ப குஷ்டம்டா ச்ச கஷ்டம்டா சாமி!

ஹேமா சொன்னது…

எங்கள் நாடுகளில்தான் இப்படியானவர்களின் எண்ணிக்கை அதிகம்.திருடனுக்குக் காவல் திருடன் போல.இவர்களெல்லாம் தாங்களாகத் திருந்தினாலே தவிர....

பெயரில்லா சொன்னது…

Is it a very important incident or issue to worry about? Have you ever thought about your salary and that constable's? Have you ever worked such a stressful environment for a peanut salary?

Don't make issue out of everything and waste everyone's time

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

இசக்கி முத்து பெரியாளாகிட்டீங்க் போல .. அனானி எல்லாம் திட்டறாங்க..
:)
ஒரு முறை தந்தது வரை சரி.. ஆனால் அதைக்கூட அதிகாரத்துக்காக தரவில்லையே அம்மா... பாவம் இந்த ஊரில் இவர்களுக்கு கிடைப்பதில்லை கேட்கிறார்கள் என்ப்தற்காக தானே தந்தார்கள்.. அது தான் சின்ன ஊர் மக்களின் அன்பு..

பெயரில்லா சொன்னது…

அதே வடிவேலுடை இன்னொரு படத்தில் "அவன் இவனை விட கேவலமா இருப்பான்னு" மாட்டுச் சாணம் அடர்ந்த முகத்தை வைத்து ஒரு வசனம் வருமே, அந்த "அவன்"தான் இந்த காவலரோ? சீ! சீ! என்ன அசிங்கமப்பா!!!
:‍(

மே. இசக்கிமுத்து சொன்னது…

அனானி அவர்களே,
உங்களிடம் ஒருவன் தட்டிப் பறிக்கும் போது உங்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ அதே கோபம் தான் எனக்கும் வந்தது. இந்த கேவலமான செயலை சமூகத்திற்கு தெரிவிப்பதில், படிப்பதில் நம் நேரம் ஒன்றும் வீணாகிவிடாது!

அந்த காவலரின் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் அனானியே, நானும் ஓர் மத்திய அரசு அலுவலர் தான், உண்மையில் என் சம்பளத்தைவிட அந்த காலரின் சம்பள விகிதம் அதிகம் தான். சம்பளம் குறைவு என்பதற்காக இம்மாதிரி அடாவடி செயல்களில் ஈடுபடலாம் என்றால் திருடனுக்கும் காலரருக்கும் என்ன வித்தியாசம்.

உங்களின் ஆதங்கத்தில் நியாயம் இருப்பதாய் எனக்கு ‍தெரியவில்லை!!!

ஜியா சொன்னது…

:((((

ராமலக்ஷ்மி சொன்னது…

காவலரிடம் மல்லுக்கும் நிற்காமல் அதே சமயம் அவரது அரட்டல் உருட்டலைச் சட்டையும் செய்யாமல் நீங்கள் நடையைக் கட்டிய விதம் சூப்பர் இசக்கிமுத்து:))!

"அட அவனா நீ" என்ற வடிவேலு அந்த அவனாகவே [காவலராக] நடித்த அர்ஜூனின் சமீபத்திய படமொன்றில் மார்க்கெட்டில் கடை கடையாகச் சென்று மாமூல் வசூலிக்கையில் பிச்சைக்காரர் ஒருவர் கூடவே பின்னால் வந்து 'எனக்கும் உனக்கும் என்னடா வித்தியாசம்' என்பது போல "அம்மா தாயே" என குரல் எழுப்பி வடிவேலுவை வெறுப்பேற்றி டென்ஷனாக்கி ரகளை பண்ணுவார்:))!

அம்மா அன்போடு கொடுத்தது சரி. காவலர் அடாவடியாகக் கேட்டதை நியாயப் படுத்துதல் எந்த விதத்திலும் சரியல்ல.

இதே போன்ற ஒரு சம்பவத்தைக் கொண்டு நான் எழுதி "திண்ணை" இணைய இதழில் வெளிவந்த கவிதையை வலையேற்றுகையில் சொல்கிறேன் இசக்கிமுத்து.

நான் குறிப்பிட்ட அர்ஜூனின் படம் "மருதமலை":)!