ஹோட்டல் வி.டீ பேரடைசில் 17.12.2008 முதல் 19.12.2008 வரை பார்ஸன் இண்ஸ்டிடியுட் ஆப் ஸ்டாட்யூடரி ரூல்ஸ் (PARSAM INSTITUTE OF STATUTARY RULES, BANGALORE) நடத்திய அரசு அலுவலர்களுக்கான " ACCOUNTING STANDARDS AND READING BALANCE SHEET " என்ற பயிலரங்கத்தில் கலந்து கொள்வதற்காக எங்கள் அலுவலகத்தில் இருந்து என்னை அனுப்பியிருந்தார்கள். நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் வேலை செய்வதால் எனக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கலந்து கொண்டேன்.
பயிலரங்கின் முதலாம் நாள் முடிவிலே எனக்கு புரிந்து விட்டது, இது அரசு R&D NON PROFITABLE ORGANISATION னில் பணி புரியும் என்னை போன்றோர்க்கு எந்த பயனுமில்லை, ஏனென்றால் பயிலரங்கில் சொல்லி தந்ததோ லாபம் ஈட்டும் கம்பெனிகளில் பணி புரிபவர்கள் தெரிந்து கொள்ள, கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள், அரசு R&D NON PROFITABLE ORGANISATIONனுக்கு அது பொருந்தாது. ஐயோ தேவையில்லாமல் என்னையும் அனுப்பி பயிலரங்க கட்டணமாக ரூ. 6180/- வேறு கொடுத்துவிட்டார்களே என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அங்கு மற்றொரு விஷயத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த விஷயம் இது தான்.
இந்த பயிலரங்கில் பெங்களூரில் உள்ள மற்றொரு அரசு R&D NON PROFITABLE ORGANISATION ஆன ADA (AERONAUTICAL DEVELOPMENT AGENCY) வில் இருந்து 10 பேர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசும் போது தான் தெரிந்தது அந்த 10 பேரில் 5 பேர் தொழில்நுட்ப பிரிவில் (SCIENTIFIC & TECHNICAL STAFF) உள்ளவர்கள் என்று. நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் வேலை செய்யும் எங்களுக்கே இப்பயிலரங்கம் பயனற்று இருக்கும் போது தொழில்நுட்ப பிரிவில் உள்ளவர்களை அவர்களுடைய நிறுவனம் எப்படி அனுப்பியது? பிறகு தான் புரிந்தது ADAவில் நிதி மற்றும் கணக்கியல் அதிகாரியாக இருக்கும் திரு.நாகராஜா என்பவர் இப்பயிலரங்கை நடத்தும் பார்ஸன் இண்ஸ்டிடியுடிற்கு மிகவும் நெருக்கமானவர், மேலும் இந்நிறுவனம் நடத்தும் எல்லா பயிலரங்கிற்கும் இவர் தான் ஒருங்கிணைப்பாளர். எனவே தான் அவருடைய அலுவலகத்தில் இருந்து அதிகமான நபர்களை தேர்வு செய்து அனுப்ப முடிந்தது. மேலும் திரு.நாகராஜாவிற்கு பல அரசு நிறுவனங்களிலுள்ள உயர் அதிகாரிகள் மிகவும் நெருக்கம். இந்த நெருக்கத்தினால் பார்ஸன் இண்ஸ்டிடியுட் நடத்தும் பயிலரங்குகளில் நிறைய பேரை பங்கு கொள்ள செய்ய முடிகிறது. அதில் ஒன்று தான் எங்கள் நிறுவனம் இந்த பயிலரங்கிற்கு என்னை அனுப்பியது. அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக எங்கள் துறை தலைவரை சந்தித்து இந்த பயிலரங்கத்தினால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறியபோது அவர் " மற்ற ACCOUNTING STANDARD பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதினால் தான் அனுப்பினேன் " என்றவாறு சமாளித்துக் கொண்டார்.
அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றிற்காக செலவு செய்யும் போது அதில் ஏதேனும் பயன்படத்தக்கதாக இருக்க வேண்டும். பயன் இல்லை என்று தெரிந்தால் அந்த செலவை குறைத்து கொள்ளலாம். இதனால் நேரத்தையும் அந்த பணத்தையும் பயனுள்ள விதத்தில் செலவிடலாம்.
இது போன்ற வீண் செலவினங்கள் நிறைய அரசு அலுவலகங்களில் நடக்கத்தான் செய்கிறது. ஒரு புறம் மத்திய அரசு அலுவலகங்களில் செலவினங்களை குறைக்க வேண்டும் என கூறி அதற்கான செயல் திட்டங்களை வகுத்து கொண்டிருக்கிறது. மறு புறம் பல அரசு அலுவலகங்களில் தேவையற்ற செலவினங்கள் தான் அதிகமாக இருக்கிறது. என்ன சொல்வது. நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்வார்களே " கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாய் "..

5 கருத்துகள்:
கடை தேங்காயோ ...
அந்த மாதிரியா?
//
இது போன்ற வீண் செலவினங்கள் நிறைய அரசு அலுவலகங்களில் நடக்கத்தான் செய்கிறது. ஒரு புறம் மத்திய அரசு அலுவலகங்களில் செலவினங்களை குறைக்க வேண்டும் என கூறி அதற்கான செயல் திட்டங்களை வகுத்து கொண்டிருக்கிறது. மறு புறம் பல அரசு அலுவலகங்களில் தேவையற்ற செலவினங்கள் தான் அதிகமாக இருக்கிறது. என்ன சொல்வது. நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்வார்களே " கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாய் "..
//
இது போன்ற செலவினங்களை குறைத்தால்
மக்களாகிய நாம் ஏன் அவஸ்தை படப்போகிறோம்
தோலுரிச்சி காட்டி இருக்கிறீர்கள் Trial Cost Nothing
கூர்ந்து கவனிப்போம் எது வரை செல்கின்றது என்று
வாழ்த்துக்கள் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்
கோழி மேய்த்தாலும் கவர்மண்டிலை கோழி மேய்க்கோணூம் என்ற எங்க ஊரிலும் சொல்லுவார்கள்.
இசக்கிமுத்து நிறைய நாட்களுக்குப் பிறகு வந்தாலும் காரமான கோபமான பதிவோடு.காயம் வராமல் நல்ல அடி.உண்மைதான்.பொதுமக்களில் எததனோயோ பேர் எத்தனையோ விதமாகக் கஸ்டப்படுகிறார்கள்.
அரசியல் கண்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லையே!
வெடித்திருக்கிறது ஆதங்கம். நல்ல பதிவு இசக்கிமுத்து. ‘அரசுப் பணம்தானே’ எனும் மெத்தனத்தில் வீண் செலவுகள் செய்யும் அரசு அலுவலகங்கள், அது மக்களின் வரிப் பணம் என்பதை மனதில் வைத்து நடந்தால் நலம்.
கருத்துரையிடுக