புதன், டிசம்பர் 31, 2008

புதிதாய் வாழ்ந்திடுவோம் !!

தோ இன்னுமொரு ஆண்டு
இப்போதும் நமக்காக,
இயற்கையை நேசித்திட
இன்னல்கள் தவிர்த்திட!

இயற்கையை நேசித்தால்,
பருவம் தப்பிய மழையுமில்லை
பாரினில் எங்கும் வெள்ளமில்லை!

பேரலை பீதியும்
பெருந்துயர் இன்னலும்
வரும் நாளில் வருவதில்லை!
இயற்கையோடு இணைந்த வாழ்வு
இறைவனோடு வாழும் வாழ்வு!

உலக மாந்தரெல்லாம்
உற்றோராய் உறவு கொள்வோம்!
மானுடம் மாண்புற
மனித நேயம் காத்திடுவோம்
பின்பு ஏதிந்த
தீவிரவாதமும் தீராத சண்டையும்!

நடந்தவையெல்லாம் பழங்கதை
நாளையே முளையட்டும் புது விதை!
புதிய சிந்தனை வந்ததுமே
புவியினில் நிலைத்திடும் ஆனந்தமே!

இயற்கையை காத்திடுவோம்
மனிதநேயம் வளர்த்திடுவோம்
புத்தாண்டில் புதிதாய் வாழ்ந்திடுவோம்!!

- மே.இசக்கிமுத்து

9 கருத்துகள்:

சரவணகுமரன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி சொன்னது…

ஆஹா, நானும் இயற்கையைப் போற்றித்தான் என் புத்தாண்டு வாழ்த்துப் பதிவை தயார் நிலையில் வைத்திருக்கிறேன். புதுவருட முதல் நாழிகையில் மலர வைக்கக் காத்திருக்கிறேன்:)!

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

sury siva சொன்னது…

// புதிய சிந்தனை வந்ததுமே
புவியினில் நிலைத்திடும் ஆனந்தமே!//

அழகான ஆரவாரமில்லாத கருத்து.
அவசியம் உணரவேண்டிய கருத்து.

தங்கள் பதிவுக்கு வந்தது மகிழ்வினைத் தருகிறது.
தாங்கள் சொல்வது மெய்யே.


சொந்தமும் பந்தமும்
வந்திடும் பின் வற்றிடும்= புதிய‌
சிந்தனை தந்திடும்
சந்தமோ வென்றிடும் = அவனியில்
ஆனந்தம் பெருகிடும்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

ஹேமா, சொன்னது…

இசக்கிமுத்து,பிறக்கின்ற தமிழ் புத்தாண்டையும் நிறைந்த கனவுகளோடு எதிர்கொள்கிறீர்கள்.
வேண்டுதல்களும்கூட.மனித மனங்கள் கொஞ்சம் இளகட்டும்.
இனிய மனம் நிறைந்த தமிழ் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

இசக்கிமுத்து,மனம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

rahini சொன்னது…

arumaiyaana varikal

பத்மா சொன்னது…

romba naalaiku piragu valai pakkam varukiren.nalla karuthudan nalla varaverpu.ungalukkum puthandu vaazhthukkal.

பத்மா சொன்னது…

isakki ,
enna aale kanum?pathivugalukaga kaathuirukiren,
padma

rahini சொன்னது…

http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI

ithoo en kural keetka