
எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு மைதானம்
போன்ற இடம் உண்டு, மழைக் காலங்களில் மதிய உணவு வேளையில் சாப்பிட்ட பின்பு
இந்த மைதானத்திற்கு சென்று பட்டுப் பூச்சி தேடி பிடித்து அதை பென்சில்
டப்டாவில் வைத்து வீீட்டிற்கு எடுத்து செல்வதுண்டு. விடுமுறை
நாட்களென்றால் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தேரியில் பட்டுப் பூச்சி
தேடி பிடிப்போம். யார் அதிகமாக
பிடிக்கிறார்கள் என்று நண்பர்களுக்குள் ஒரு போட்டியே உண்டு. ஒன்று அல்லது இரண்டு கிடைத்தால் காலி
தீப்பெட்டியிலும், நிறைய வைத்திருப்பவர்கள் பெரிய டப்பாவில் வைத்து
வளர்ப்போம். அதற்கு இரையாக அருகம் புள்ளை பொட்டு வைப்போம். தினமும்
காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பட்டுப் பூச்சி என்ன செய்கிறது என்றும்
குட்டியிட்டிருக்கிறதா என்றும் பார்ப்பதுண்டு. அதன் செய்கைகளை நண்பர்களிடம்
பெருமையாக பேசிக்கொள்வோம். சின்னது, பெரியது மற்றும் குட்டிகள் என
பார்த்து ரசித்து கொண்டே இருந்த நாட்கள் நினைவலைகளாய் இன்றும் மனதை
நனைத்துக் கொண்டு தான் இருக்கிறது..
- மே. இசக்கிமுத்து..
1 கருத்து:
மலரும் நினைவுகள்.
நல்ல பகிர்வு.
கருத்துரையிடுக